Ad Widget

போராட்டத்தில் குதித்தனர் யாழ்.பல்கலை மாணவர்கள்

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் இன்று முதல் காலவரையறையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

கலைப்பீடத்தின் கீழ் இருக்கின்ற புவியியற்துறையின் திட்டமிடல் கற்கைநெறிக்கு சிறப்புக்கலை மாணவர்களை இணைப்பதில் பல்கலைக்கழக நிர்வாகம் காட்டிவருகின்ற குளறுபடியான செயற்பாடுகளால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மாணவர்கள் இதற்கு எதிராக போராட்டம் ஒன்றை இன்றைய தினம் முன்னெடுத்தனர்.

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கையேட்டில் 3.3 தகைமைப் புள்ளி சிறப்புக்கலையைத் தொடர்வதற்கு போதுமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் துணைவேந்தர் சிறப்புக்கலைக்கு 40 மாணவர்களையே இணைத்துக் கொள்ளளுமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஆனால் குறித்த தகைமைப் புள்ளிகளுக்கு மேல் 40க்கு அதிகமான மாணவர்கள் இருப்பதால் தங்களுடைய துறைக்கு மேலதிகமாக மாணவர்களை இணைத்துக் கொள்ள முடியாது என துறைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணவர்கள் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர் .தமக்கு சரியான தீர்வு கிடைக்கும் வரை விரிவுரைகளுக்கு சமூகமளிக்காமல் எதிர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுக்க போகின்றோம்.

பாடசாலையில் பாடத் தெரிவினை பல்கலைக்கழக பட்டப்படிப்பினை இலங்குவாக மேற்கொள்ளுவதற்காகவே தேர்ந்தெடுத்து கல்வி கற்க வந்தோம்.

ஆனால் பல்கலைக்கழகம் எமது விருப்ப தெரிவான கல்வி செயற்பாட்டை மேற்கொள்ள தடை விதிப்பதுடன் வருடா வருடம் குறித்த பாடங்களுக்கு தகைமைப் புள்ளிகளையும் மாற்றி அமைக்கிறது.

குறிப்பாக நீண்ட காலங்களாக கலைப்பீடத்தில் சிறப்பு கலையினை கற்பதற்கு 2.7 தகைமைப் புள்ளியாக இருந்தது.

Related Posts