Ad Widget

பொலிஸார் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டனர்: தம்பிராசா

jaffna_20813_5தன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது அருகில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று வாகனங்களையும், தாக்குதல் சூத்திரதாரிகள் 12 பேரையும் 24 மணித்தியாலயங்களுக்குள் கைதுசெய்வதாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ண உறுதியளித்திருந்த நிலையில், இதுவரையில் எவரையும் கைதுசெய்யவில்லை’ என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

‘கடந்த 20 ஆம் திகதி யாழ். மின்சார நிலைய வீதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனின் தந்தையாரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம், தாக்குதல் மேற்கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கடந்த சனிக்கிழமை யாழ். தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேராவிடம் வினவிய போது அவர் கடும் வார்த்தைகள் திட்டினார்.

இந்நிலையில், யாழ். பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கடந்த சனிக்கிழமை சத்தியாக்கிரக போராட்டத்தினை ஆரம்பித்தபோது ஊடகவியலாளர்கள் சமன் சிகேராவினால் கலைத்து விடப்பட்டதை அவதானித்தேன்.

அதன்பின்னர், மாலை 5.00 மணியளவில் என்னை சந்தித்த யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ண 24 மணித்தியாலயங்களுக்குள் மூன்று வாகனங்களையும், தாக்குதல் மேற்கொண்டவர்களையும் கைதுசெய்வதாக வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அவர் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை’ என்று அவர் குறிப்பிட்டார்.

Related Posts