Ad Widget

பொலிஸாரை இலக்குவைத்து தாக்குதல் ; பிரதான சந்தேக நபர் ரிஐடியின் தடுப்புக் காவலில்!!

வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எனக் குறிப்பிட்டு கைது செய்யப்பட்ட நபரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தொடர்ந்து தடுப்பில் வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

துன்னாலை பகுதியைச் பொன்னுத்துரை சுஜீதரன் (வயது 28) என்பவரையே விசாரணைக்காக கைது செய்வதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவு தேடி வந்த நிலையில் அந்த நபர் இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கபப்ட்டார்.

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் உள்ள முச்சந்தியில் கடந்த 27ஆம் திகதி மணல் கடத்தலைத் தடுக்க சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொலிஸாரை அச்சுறுத்தும் வகையில் அவர்களை இலக்கு வைத்து சக்தி குறைந்த கிளைமோர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.

சட்டவிரோத மண் அகழ்வுகள் , மண் கடத்தல்களை தடுக்கும் நோக்குடன் அந்தப் பகுதியில் பொலிஸார் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு வருவதுடன் , குறித்த சந்தி பகுதியில் நின்று வீதி சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவது வழமையாகும்.

இந்நிலையில் அன்றைய தினமும் வழமையான வீதி சோதனை நடவடிக்கைக்காக குறித்த சந்திப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் வந்திறங்கிய போது நிலத்தில் இருந்த கிளைமோர் ஒன்று வெடித்ததிலையே அவர்கள் இருவரும் காயமடைந்தனர்.

இந்நிலையிலையே இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகபரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts