Ad Widget

பொலித்தீன் பாவனையைத் தடை செய்யும் உத்தரவு விரைவில் அமுல்படுத்தப்படும் – ஐங்கரநேசன்

வடமாகாணத்தில் பொலித்தீன் பாவனையைத் தடை செய்யும் உத்தரவு விரைவில் அமுல்படுத்தப்படும் என வடமாகாண
விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

inkara-nesan

நல்லூர் பிரதேச சபை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாகாண சபை உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென்னிலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள பொலித்தீன் பொருட்கள் இங்கு கொண்டு வரப்பட்டு விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பொலித்தீன் பாவனையால் டயக்சின் வாயு வெளியேறி உயிராபத்துக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.

இந்நிலையில் வடமாகாணத்தில் பொலித்தீன் பாவனையைத் தடை செய்யும் உத்தரவு விரைவில் அமுல்படுத்தப்படும்.
அத்துடன் இவ்வாறான நிகழ்வுகளின் போது பிளாஸ்ரிக் பூமாலை பயன்படுத்துவதை தவிர்த்து பூ மரங்களிலிருந்து பெறப்பட்ட பூக்களில் மாலை அணிவிக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts