Ad Widget

பொறுப்புக் கூறும் விடயங்களை கையாள்வதில் ஆணைக்குழு அறிக்கை தவறிழைத்துவிட்டது!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை

கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது பொறுப்புக் கூறும் விடயங்களை கையாள்வது தொடர்பில் அர்த்தபுஷ்டியான வலுவான முறைமைகளை கையாள்வதிலும் இருந்து முற்று முழுதாக தவறிழைத்து விட்டது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் 13 பேர் கையொப்பமிட்டு சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் அனுப்பி வைத்துள்ள மேற்படி ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2009 ம் ஆண்டு மே மாதம் 26 ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துடன் இணைந்து விடுக்கப்பட்ட அறிக்கையில் சர்வதேச மனித உரிமையின் தரம் மற்றும் சர்வதேச இணக்கப்பாட்டுடன் மனித உரிமைகளின் மேம்பாடு தொடர்பில் அர்ப்பணிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.

சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை தொடர்பிலான சட்டத்தை மீறுவது தொடர்பிலான பொறுப்பு மற்றும் செயற்பாடுகளில் அது தனது கவனத்தை செலுத்தியிருந்தது. அந்த துன்பங்கள் குறித்து செயலாற்றுவதற்கு அரசாங்கம் தெளிவாக பொறுப்பேற்றுக்கொண்டது.

எனினும் கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அதன் பொறுப்பை முன்கொண்டு செல்வதற்கு தவறிழைத்துவிட்டது.

ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்தனர். அவர்கள் யுத்தத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள். தங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றே அவர்கள் பொறுப்பை ஆணைக்குழுவிடம் ஒப்படைத்தனர் எனினும் ஆணைக்குழு அதனை சவாலுக்கு உட்படுத்திவிட்டது.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இருத்தரப்பினராலும் மீறப்பட்ட யுத்த குற்றச்சாட்டுகள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் முழுமையான விமர்சனம் தேவை.

சிவில் மக்களை இலக்காக கொண்டு வேண்டுமென்றே தாக்குதல்களை நடத்துவதற்கே இன்றேல் சிவில் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியமை தொடர்பில் புலிகளின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

யுத்த சூனிய வலயத்தின் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. வைத்தியசாலைகள் உள்ளிட்ட மக்கள் குழுமியிருந்த இடங்களின் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. நிராயுதபாணிகள் மீது தாக்கியமை இன்றே காணாமல் ஆக்கியமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஆணைக்குழு தனது அறிக்கையில் பொறுப்பு கூறும் விடயங்களை கையாள்வது தொடர்பில் அர்த்தபுஷ்டியான வலுவான முறைமைகளை கையாள்வதிலும் இருந்து முற்று முழுதாக தவறிழைத்துவிட்டது. என்றுள்ளது.

Related Posts