Ad Widget

பொன்னாலையில் மினி சூறாவளி!

பொன்னாலையில் வீசிய மினி சூறாவளியால் வீடுகள், கடைகள் மற்றும் பொதுக் கட்டடங்களின் கூரைகள் சேதமாகியுள்ளன. இந்திய வீட்டுத்திட்டத்தினால் வழங்கப்பட்ட வீடொன்றின் ஓடுகள் தூக்கிவீசப்பட்டுள்ளன.

article_1462032749-ponnalai-4

வலிகாமம் மேற்குப் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை 2.30 மணியளவில் பலத்த மழையுடன் காற்று வீசியதுடன் மினி சூறாவளியும் ஆரம்பமானது.

இந்தச் சூறாவளியால் வீடுகளின் கூரைகள் முற்றாகத் தூக்கி வீசப்பட்டுள்ளன.

இந்தச் சூறாவளிக்காற்றினால், பொன்னாலை சந்தியில் நாராயணன் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தொழிலாளர்களுக்கென கடந்த வருடம் அமைக்கப்பட்ட ஓய்வு மண்டப ஓட்டுக் கூரையின் ஒரு பகுதி தூக்கி வீசப்பட்டது. இந்த கட்டிடத்திற்கு அருகில் வலி.மேற்கு பிரதேச சபையால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட மீன் சந்தைக் கட்டிடக் கூரையின் ஒரு பகுதி, நாராயணன் தாகசாந்தி நிலையத்தின் கூரையின் ஒரு பகுதி, இப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை ஆகியன சேதத்துக்குள்ளாகின.

இந்த அனர்த்தத்தை, பொன்னாலை கிராமசேவையாளர் பொ.தீசன், மூளாய் கிராமசேவையாளர் ஆர்.ரஞ்சன் மற்றும் வலிகாம் மேற்கு அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் ஆகியோர் நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

Related Posts