Ad Widget

பொது மன்னிப்பு அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் – டக்ளஸ்

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் இதுவரையில் வழக்குத்தாக்கல் செய்யப்படாதவர்கள், வழக்குத்தாக்கல் செய்யப்பட்டவர்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள் அனைவரும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதைப் போன்று, வரவிருக்கும் ஜெனீவா முடிவுகளுடன் உள்ளடக்கி இவர்கள் அனைவரும் பொது மன்னிப்பு அடைப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

இது தொடர்பில் நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளேன். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையானது தொடர்ந்தும் காலதாமதமாகி வருவதானது எமது மக்களிடையே கசப்பான உணர்வுகளையே தொடர்ந்தும் வளர்த்து வருகிறது.

எமது மக்களின் இத்தகைய உணர்வுபூர்வமான பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதன் மூலமே எமது மக்கள் மத்தியில் தேசிய நல்லிணக்கம் தொடர்பான நம்பிக்கையினை வளர்க்க இயலும்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உடனடி அவதானம் செலுத்தி, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts