பொது இடத்தில் மது அருந்தும் சுதந்திரம் உண்டு

beer-wineபொது இடத்தில் மது அருந்தும் சுதந்திரம் மக்களுக்கு உள்ளதென பூகொட நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான இந்திக கலிங்கவன்ஸ நேற்று நீதிமன்றில் தெரிவித்தார்.

மது அருந்திவிட்டு நடந்து திரிபவர்களை கைது செய்ய முடியாது. பிழையான முறையில் நடந்து பொதுமக்களுக்கு தொந்தரவு செய்தால் மட்டுமே அவர்களை கைது செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

பொது இடத்தில் மது அருந்தியமைக்காக நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களை விடுதலை செய்து விட்டே நீதவான் இந்திக கலிங்கவன்ஸ மேற்கண்டவாறு இக்கருத்தை தெரிவித்தார்.

Related Posts