Ad Widget

பொதுபல சேனாவுடன் இணைந்து செயற்படுவோம் – விராது

இனிவரும் காலங்களில், பொது பல சேனா அமைப்புடன் மியன்மாரின் 969 அமைப்பு ஒன்றிணைந்து செயற்படும் என கூறிகொள்ள விரும்புகின்றேன் என அந்த அமைப்பின் தலைவரும் நிறுவனருமான அஸின் விராது கூறினார்.

burma_wirathu

சுகததாச உள்ளக அரங்கில் ஞாயிற்றுக்கிழமை(28) இடம்பெற்ற பொதுபல சேனா அமைப்பின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார்.

பொதுபல சேனா அமைப்பின் இந்த பௌத்த தேசிய மாநாடு பௌத்தர்களான எமக்கு மிகவும் முக்கியமானது.

இன்று உலகம் முழுவதும் இஸ்லாமிய போராளிகளால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. பௌத்தர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலகாளாவிய ரீதியில் பொருளாதாரம் தொழில்நுட்ப ரீதியிலும் பொளத்தர்களுக்கு எதிராக இடையூறுகள் விளைவிக்கப்படுகின்றன.

சர்வதேச கொலையாளிகளுக்கு மத்தியில் அஹிம்சாவாதியான பௌத்தர்களை தவறு செய்தவர்களாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவையனைத்துக்கும் முஸ்லிம் தீவிரவாதிகளும் அவர்களுக்கு கிடைக்கின்ற சில சக்திகளும் காரணமாக உள்ளன.

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது, பௌத்தர்கள் மிக சிறிய குழுவாகவே உள்ளனர். இந்த சிறிய அளவினரான பௌத்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யாவிட்டால் இதுவே பௌத்தர்களின் இறுதி காலமாக அமையும் என்பதை ஞாபகப்படுத்துகின்றேன்.

எமது நோக்கம் பௌத்தர்களை பாதுகாப்பது ஆகும் அதற்கான நடவடிக்கைகள் எடுப்பது மிகவும் பயனுள்ளதாகும்.

பௌத்தர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்கவும் உலகளாவிய ரீதியில் பௌத்தர்களை பாதுகாப்பதற்குமாக இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்புடன் எனது 969 அமைப்பு ஒன்றிணைந்து செயற்படும் என்பதை கூறிகொள்ள விரும்புகின்றேன்.

முஸ்லிம் தீவிரவாதிகளின் சதியை உடைத்தெறியும் வண்ணமாக எனக்கு வீசா வழங்கிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.

இவ்வாறு மியன்மாரின் சர்ச்சைக்குரிய மதத்தலைவரும் 969 அமைப்பின் தலைவரும் நிறுவனருமான அஸின் விராது கூறினார்.

Related Posts