Ad Widget

பேஸ்புக் மூலமாக சிறுவர்களை ஏமாற்றி துஷ்பிரயோக முயற்சி: அறுவர் கைது

Facebook-Spy-chatபேஸ்புக் மூலமாக சிறுவர்களை ஏமாற்றி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் பற்றிய தகவல்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாகவும் அவர்களில் அறுவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகார சபையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பேஸ்புக் மூலமாக இடம்பெறும் இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசேட வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவருவதாகவும் இவ்வாறானவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், போலியான பெயர், வயது மற்றும் புகைப்படங்களுடன் முகப் புத்தகங்களை ஆரம்பித்து அதன் மூலமாக சிறுவர்களை தொடர்பு கொண்டு அவர்களை துஷ்பிரயோகம் செய்யும் வழிமுறைகளை பலர் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான விடயங்கள் பற்றிய தகவல்களை அறிந்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, அவர்களின் பாணியிலேயே சென்று அறுவரை கைது செய்துள்ளதுடன் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு முற்படும் சுமார் 2000த்திற்கும் அதிகமானவர்கள் பற்றிய தகவல்களையும் பெற்றுள்ளது.

இவ்வாறு பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts