Ad Widget

பெண் சட்டத்தரணியின் குடும்பத்துக்கு அபகீர்த்தி: அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் பெண் சட்டத்தரணியின் குடும்பத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் வெளியான செய்தி தொடர்பாக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அறிக்கையை பெற்று, நீதிமன்றுக்கு சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா வியாழக்கிழமை (04) உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பெண் சட்டத்தரணி ஒருவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில், அவரது கணவர் தொடர்பாக கடந்த புதன்கிழமை (01) இணையத்தளங்களில் செய்தி வெளியாகியமை தொடர்பாக, குறித்த சட்டத்தரணியின் கணவனால் கடந்த புதன்கிழமை (01) இரவு கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அந்த முறைப்பாடு தொடர்பான வழக்கை விசாரணை செய்த நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, இணையத்தளத்தில் வெளியான செய்தி தொடர்புடைய அறிக்கையை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் மூலம் பெற்று, நீதிமன்றுக்கு எதிர்வரும் 15ஆம் திகதியன்று சமர்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த இணையளத்தளத்தின் செய்தி தொடர்பான விசாரணைகளை நீதிமன்றினூடாக விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்கு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts