கொழும்புத்துறை சென் மேரிஸ் வீதியைச் சேர்ந்த குஷியந்தன் கஜந்தினி (25) என்ற பெண்ணைக் கடந்த திங்கட்கிழமை (05) முதல் காணவில்லையென அவரது பெற்றோர் செவ்வாய்க்கிழமை (6) மாலை யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். நகரத்திற்குச் சென்று வருவதாக கூறிச் கடந்த திங்கட்கிழமை (05) சென்ற இவர் இதுவரை வீடு திரும்பவில்லை என பெற்றோர் தங்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளினை பொலிஸாhர் மேற்கொண்டு வருகின்றனர்.