Ad Widget

பெண்ணின் முதுகு தோலினால் பைண்ட் செய்யப்பட்ட ஹார்வார்ட் புத்தகம்

அமெரிக்காவில் உள்ள ஹார்வார்ட் நூலகத்தில் மனித தோலால் பைண்டிங் செய்யப்பட்ட புத்தகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

women-skin

1880 களில் வெளியிடப்பட்ட Des destinées de l’ame என்னும் புத்தகம் ஒரு பெண்ணின் முதுகிலிருந்த தோலினால் பைண்டிங் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபட்டுள்ளதாக தெரிகிறது.

Destinies of The Soul என்னும் மனித ஆன்மா குறித்த தகவல்களை கொண்ட இந்த புத்தகம் மனித தோலினால் மூடபட்டுள்ளதாக அதனை ஹார்வார்ட் நூலகத்திற்கு அளித்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

1930 களில் இருந்து ஹார்வார்ட் நூலகத்தில் இருக்கும் இந்த புத்தகத்தின் மேல்புறத்தில் மனித தோல் இருப்பதும், அந்த தோல், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சடலத்தின் முதுகுப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts