Ad Widget

பெண்களுக்கான தையல் பயிற்சி நெறி ஆரம்பிப்பு

sewingsவடமராட்சி இடம்பெயர்ந்தோர் நலன் பேணும் அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் தையல் பயிற்சி நெறியொன்று வடமராட்சி, பருத்தித்துறை, சுப்பர்மடம் மாதர் சங்க மண்டபத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடமராட்சி இடம்பெயர்ந்தோர் நலன் பேணும் அபிவிருத்தி அமைப்பினால் இத் தையல் பயிற்சி மேற்கொள்ளப்படுகின்றது.

இப்பயிற்சி நெறியில் சுமார் 40 பெண்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கு இலவசமாக தையல் பயிற்சிக்கான துணிகளும் வழங்கப்பட்டன.

இதேபோல் ஏற்கனவே கற்கோவளத்தில் தையல் வகுப்புக்கள் நடாத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வடமராட்சி இடம்பெயர்ந்தோர் நலன் பேணும் அபிவிருத்தி அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை தவச்செல்வம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பருத்தித்துறை காணி மேலதிக மாவட்டப் பதிவாளர் நிக்கிலஸ் பிரபாகரன், பருத்தித்துறை பிரதேச செயலக சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், அருட்சகோதரர் ஜெயக்குமார், பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளர் பூ.சஞ்சீவன், பருத்தித்துறை பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பாடசாலை மாணவர்களுக்கான இலவச உபகரணங்களும் வழங்கப்பட்டன.

Related Posts