Ad Widget

புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் 32 மில்லியன் ரூபா செலவில் வடக்கு விவசாய அமைச்சால் நிர்மாணம்

கிளிநொச்சி மாவட்ட மாயவனூரில் புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளிடம் வடக்கு மாகாண முதல்வர் க.வி. விக்னேஸ்வரனால் நேற்று வெள்ளிக்கிழமை (23.01.2015) கையளிக்கப்பட்டுள்ளது.

2

மாயவனூர் பகுதி மக்கள் குடிப்பதற்கும் விவசாயத்துக்கும் தாம் நீரின்றி அவலப்படுவதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு முறைப்பாடு செய்திருந்தனர். இதையடுத்து, விவசாய அமைச்சின் 2014ஆம் ஆண்டுக்குரிய மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து 32 மில்லியன் ரூபா நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கு ஒதுகீடு செய்யப்பட்டு புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த யூன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் கட்டுமானப்பணிகள்தற்போது முடிவடைந்தநிலையில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனால் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

4

இத்திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் நீரைப்பயன்படுத்தி 100 விவசாயிகள் தலா ஒரு ஏக்கர் வீதம் 100 ஏக்கர்களில் மேட்டுநிலப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள முடியும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப,100 பயனாளிகளுக்கு விவசாயத் திணைக்களத்தால் பல்வேறு பயிர்களின் விதைகள் அடங்கிய பொதிகளும், பழமரக்கன்றுகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு,நீண்டகாலம் கைவிடப்பட்டதால் பற்றைகளால் மூடப்பட்டிருக்கும் காணிகளைத் துப்பரவு செய்து பயிர்ச்செய்கையை மேற்கொள்ளுவதற்கு வசதியாக பயனாளிகள் அனைவருக்கும் நீர்வேலியில் உருவாக்கப்பட்ட தரமான கத்திகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் நாடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடமாகாணக் கல்வி அமைச்சர் த. குருகுலராஜா, வடமாகாணசபை உறுப்பினர் ப. அரியரத்தினம், வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், வடமாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் சோ.சிவபாதம், மற்றும் திணைக்களங்களின் பிரதிப்பணிப்பாளர்கள், பொறியியலாளர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.

21

இதுவரைகாலமும் புழுதிமண்டலமாகக் காட்சியளித்த மாயவனூரில் வாய்க்கால்களின் ஊடாக நீர் பொங்கிப்பாய்வதைக் காண்பதற்காக ஏராளமான மாயவனூர் மக்கள் மகிழ்ச்சிப் பொங்கக் கூடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

22

மேலும் படங்களுக்கு..

Related Posts