Ad Widget

புலிகள் மீதான தடை நீக்கம்: தீர்ப்புக்கு கூட்டமைப்பு வரவேற்பு

“தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்குவது அவசியம் என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்கின்றது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

TNA-logo

ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான நீதியான – நியாயமான விடயங்களை ஆராய்ந்து அந்நாட்டு சட்டங்களுக்கு அமைவாக தடையை நீக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழரசுக் கட்சி மாநாட்டின் தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கையை முன்னெடுக்காது விட்டால் திட்டமிட்டபடி தொடரப்படும் அறவழிப் போராட்டத்திற்கு புலம்பெயர் தமிழர் சமூகம் ஜனநாயக ரீதியில் தமது ஆதரவை வழங்கவேண்டும் என ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தின்போது தான் கோரிக்கை விடுத்ததார் எனவும் மாவை எம்.பி. மேலும் தெரிவித்தார்.

Related Posts