Ad Widget

புலிகள் உருவாக்கிய வளத்தை அழிக்கும் இலங்கை ராணுவம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் சின்னப்பல்லவராயன்கட்டு கிராமத்தில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தென்னந்தோப்பை, ராணுவத்தினர் தீயிட்டு அழிப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இங்கு வசித்த மக்கள் போர்க்காலத்தில் இடம்பெயர்ந்ததால், கடந்த ஆட்சிக்காலத்தில் ராணுவத்திற்கு 100 ஏக்கர் தென்னையும் குடமுருட்டிக் குளத்தின் கீழ் உள்ள வயல் நிலங்களில் வசித்த மக்களுக்கு 25 ஏக்கர் தென்னையும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

எனினும், தென்னைகள் உரிய பராமரிப்பின்றி காணப்படுவதோடு, தென்னைகளுக்கு ராணுவம் தீமூட்டி வருவதாக மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

அதுமட்டுமன்றி, தென்னையை பாதுகாக்க அமைக்கப்பட்ட வேலிகளை ராணுவமும் கடற்படையும் பிடுங்கிச் சென்று தமது படை முகாம்களுக்கு பயன்படுத்தவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

புலிகள் காலத்தில் மிகவும் செழிப்பாக வளர்க்கப்பட்டு, பல குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்த தென்னை மரங்கள் இவ்வாறு அழிவடைவதை தடுக்க, குறித்த காணியினை வடக்கு மாகாண விவசாய அமைச்சு பொறுப்பேற்க வேண்டும் என்பதே இப்பிரதேச மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Posts