Ad Widget

புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தைக் குழப்ப முயற்சி! யாழ். தளபதி

யாழ்ப்பாணத்தில் பதற்ற நிலை ஏற்படும் அளவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் அந்நாடுகளில் தொடர்ந்தும் வாழ்வதற்கு முடியும் என்பதுடன், அதற்காக பழைமைவாத அரசியல் பிரிவுகள் ஊடாக பெருந்தொகை பணத்தை அவர்கள் செலவிடுவதாக யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார்.

udaya perera

4ஆவது முறையாக இலங்கையில் நடத்தப்பட்ட, பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்ட இந்திய தூதரகங்களின் பாதுகாப்பு ஆலோசகர்கள், ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட போது, பலாலி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே மேஜர் ஜெனரல் உதய பேரேரா இதனை கூறினார்.

அவுஸ்திரேலியா, கானா, சாம்பியா, நெதர்லாந்து உட்பட 11 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர்கள் இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர். இந்தியாவின் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் அசேஷக் மேத்தா விஷேட அதிதியாக இதில் கலந்து கொண்டார்.

யாழ். குடாநாட்டின் சமூக, கலாசார மற்றும் சமய பின்னணி பற்றிய அடிப்படை தெளிவினை, வருகை தந்தவர்களுக்காக வழங்கிய கட்டளைத் தளபதி யுத்தத்தின் பின்னர் பாதுகாப்புப் படையினரால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் மற்றும் மனிதாபிமான செயற்பாடுகள் பற்றி வெளிநாட்டு இராணுவ அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தினார்.

யாழ்ப்பாண மக்களின் கல்வி, பொருளாதார, சுகாதார மற்றும் விளையாட்டு போன்ற பிரிவுகளின் மேம்பாட்டிற்கு யாழ். கட்டளைத் தலைமையகதினால் சுமார் 17 திட்டங்கள் தற்போதும், ஒத்துழைப்பு நிலையத்தின் ஊடாக செயற்படுத்தினாலும் சிவில் செயற்பாடுகளில் எவ்வித தலையீடும் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் அவர் கூறினார்.

1118 குடும்பங்கள் மீளக்குடியேற்றவுள்ளனர், அவர்களில் அதிகமானோர் தற்போது வாழும் இடத்திலேயே நிரந்தரமாக குடியிருக்கத் தயார். எவ்வாராயினும் மீள்குடியேற்ற தேவையான அடிப்படை வசதிகள் தற்போதைக்கும் மேற்கொள்ளப்பட்டிருப்பினும், சில பிரிவினர் அரசியல் இலாபத்திற்காக அதற்கு தடை ஏற்படுத்துகின்றனர் என்றும் மேஜர் ஜெனரல் உதய பெரேரா குறிப்பிட்டார்.

இந்த அனைத்து செயற்திட்டங்களும் தேசிய நல்லிணக்கத்தை நோக்காகக் கொண்டுள்ளதென்றும், இவற்றின் மத்தியில் தமது படையினர் தேசிய பாதுகாப்பு பற்றி அவதானத்துடன் இருப்பதாகவும் கட்டளைத் தளபதி பிரதிநிதிகளுக்கு தெரிவித்தார்.

வெளிநாட்டு இராணுவ அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த மேஜர் ஜெனரல் உதய பேரேரா அவர்கள் எல்ரீரீஈ சார்புடைய அரசியல் பிரிவினரால் இலங்கை பாதுகாப்புப் படையினர் சிங்கள இராணுவம் என்று சர்வதேச சமூகத்தின் மத்தியில் தோலுறிப்பதாகவும், இராணுவத்தில் இணைவதற்கு வடக்கின் இளைஞர் யுவதிகளுக்கு இலங்கை அரசாங்கத்தால் இடவசதி ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் மேற்குறிப்பிட்ட அரசியல் பிரிவினர் வீடு வீடாகச் சென்று இராணுவத்திலோ அல்லது பொலிஸ் பிரிவிலோ இணைந்து கொள்ள வேண்டாம் என்று இளையோரை அச்சுறுத்துவதாகவும் தெரிவித்த தளபதி, அவ்வாரான தடைகள் மத்தியிலும் யாழ்ப்பாணத்தின் இளைஞர் யுவதிகள் 500க்கும் மேற்பட்டோர் இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டதாக சுட்டிக் காட்டினார்.

Related Posts