Ad Widget

புனர்வாழ்வு பெற்றவர்களின் நலனைக் கவனிக்க யாழில் அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

Socio Economic & welfareபுனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளின் பொருளாதார சமூக மற்றும் நலன்புரி தொடர்பான விடயங்களை கண்காணிக்கும் இணைப்பு காரியாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

அதன்படி யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு யாழ். மாவட்டத்திற்கான இந்த புதிய அலுவலகம் திறந்து யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

எனவே குறித்த அலுவலகமானது இன்று முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக அதன் இணைப்பாளர் மேஜர் ஏ.சி. ஜெகத்குமார தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தினை அடுத்து கைது செய்யப்பட்ட சரணடைந்த முன்னாள் பேராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

அவ்வாறான இளைஞர் யுவதிகளின் எதிர்கால நலனைக் கருத்திற் கொண்டு இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

புனர்வாழ்வு பெற்றோருக்காக பொருளாதார, சமூக, நலன்புரி இணைப்பு வேலைத்திட்டம்

Related Posts