Ad Widget

புனர்வாழ்வு காலத்தை குறைக்குமாறு முன்னாள் போராளிகள் கோரிக்கை

நீண்டகாலமாக தடுப்பு முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டு இருந்து, புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படும் தங்களின் புனர்வாழ்வுக் காலத்தை குறைக்குமாறு மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம், புனர்வாழ்வு பெற்றுவரம் முன்னாள் போராளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா பூந்தோட்ட புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகள் 52பேரை, மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சனிக்கிழமை (20) சந்தித்து கலந்துரையாடினார்.

வவுனியாவில் உள்ள பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு சென்ற பிரதியமைச்சர், அங்கு புனர்வாழ்வு பெற்று வரும் பெண்ணொருவர் உட்பட 52 பேரை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார். அதன்போது அவர்கள்,

‘தாம் நீண்டகாலமாக தடுப்பு முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டு இருந்து, தற்போதுதான் நீதிமன்றம் தம்மை ஒரு வருடகாலம் புனர்வாழ்வுக்கு உட்படுத்த உத்தரவு இட்டுள்ளதாகவும், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததை கருத்தில் கொண்டு தமது புனர்வாழ்வு காலத்தை குறைக்குமாறு’ கோரிக்கை முன்வைத்தனர்.

அதற்கு பதிலளித்த அவர், இக்கோரிக்கை தொடர்பில், தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சட்டமா அதிபர் ஆகியோருடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Related Posts