Ad Widget

புதிய சீர்திருத்தம் மக்களின் சுதந்திரத்தினைப் பாதிக்கும்: சுமந்திரன்

அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக நடைமுறைப்படுத்தவுள்ள சட்ட சீர்திருத்தமானது மிகவும் அபாயகரமானது என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத திருத்த யோசனைகள் அரசாங்கத்தினால் மீள்பரிசீலனை செய்யப்படவேண்டும். இது தமிழ் மக்களிற்கு மிக மோசமான விளைவுகளைத் தரக்கூடிய சீர்திருத்தமாகும். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

இச்சீர்திருத்தச் சட்டத்தினை நாம் முற்றாக எதிர்ப்பதோடு இதனை அமுல்படுத்துவதற்கும் விட மாட்டோம். இது மக்களின் அடிப்படைச் சுதந்திரத்தினை மேலும் பறிக்கும் செயலாக அமைந்துள்ளது. இச்சட்டம் குறித்து அரசாங்கம் உடனடியாகவே மாற்றங்களைச் செய்ய முன்வரவேண்டும்” என எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts