Ad Widget

புதிய அரசியலமைப்பில் வடக்கு, கிழக்கை இணைக்க வலியுறுத்துகிறது கூட்டமைப்பு!

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நோர்வேயின் அரசியலமைப்பு நிபுணரான கெவன் வெலான்கேவின் ஆலோசனையின் அடிப்படையில், வரையப்படும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கை இணைக்க வேண்டும் எனவும் அரசியலமைப்புச் சட்டம் குறித்து வடக்கு, கிழக்கு மக்களின் கருத்தை அறிய வேண்டும் எனவும் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கேட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழு நோர்வேயின் அரசியலமைப்புச் சட்ட நிபுணரிடமும் இந்தக் கோரிக்கையை முன்வைக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அத்துடன் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கும் சட்டத்திட்டங்களை அதில் உள்ளடக்குமாறும் அதில் பொலிஸ் அதிகாரங்களை சேர்க்குமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுள்ளது.

Related Posts