Ad Widget

புதிய அமைப்பை உருவாக்கும் நோக்கமில்லை – சங்கரி

Anantha-sankareeசில அரசியல் குழுக்களுடன் யாழ்நகரில் உள்ள யூரோவில் மண்டபத்தில் கடந்த 11 ஆம் திகதி சனிக்கிழமை நடந்ததாகக் கூறப்படும் நிகழ்வு உண்மையானதேயாகும். ஆனால், அதன் நோக்கம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாறான ஓர் அமைப்பை உருவாக்குவதல்ல என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மிகக் குழப்பமான நிலையில் உள்ள யாழ்ப்பாணக் கள நிலைபற்றிக் கலந்துரையாடும் நோக்கில் சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய உட்படப் பல்வேறு அரசியல் கட்சிகளைச்சேர்ந்த பிரமுகர்களின் கூட்டமே அன்று நடைபெற்றது.

இதில், ஈ.பி.டி.பியைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா, சிறி ரெலோவைச்சேர்ந்த உதயராசா, தமிழர் விடுதலைக்கூட்டணியைச்சேர்ந்த நான் ஆகிய மூவரும், பத்பநாபா (ஈ.பி.ஆர்.எல்.எப்)ஐச் சேர்ந்த சிறிதரனுடன் இணைந்து ஒரு மாற்று அணியை உருவாக்க எண்ணுகின்றோம் என்ற ஒரு தப்பான அபிப்பிராயம் மக்களுக்குக் கொடுக்கப்படுகின்றது. உண்மையில் சிறிதரன் தான் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.

இவர் என்னுடன் நீண்ட காலமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டவராவார். ஏற்கெனவே கூறப்பட்ட தலைவர்களும் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணத்தின் கள நிலைமையப் பற்றியே இங்கு பேசப்பட்டது. மாகாண சபையின் அதிகாரங்கள், பிரதேச சபையின் செயற்பாடுகள்,சில பிரதேச சபைகளின் வரவு-செலவுத்திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டமை போன்ற விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டன.

இந்த கூட்டத்தை கூட்டியோருக்கு நல்லெண்ணம் இருந்ததேயன்றி தீய நோக்கம் ஏதும் இருக்கவில்லை. மூன்றரை ஆண்டுகளாக எத்தனை திட்டமிட்ட புறக்கணிப்பு, கழுத்தறுப்புக்களை எல்லாவறறையும் பொறுத்துக்கொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் தொடர்ந்து கட்டிக்காத்தே வருகின்றேன். ஆனால் அங்குள்ளவர்களிலும் பார்க்க என்னிடம் எதுவும் இல்லாது போனாலும் என்னிடம் நாட்டுப்பற்று, இனப்பற்று,விசுவாசம் அத்தனையும் நிறைய உண்டு.

இன முரண்பாட்டுக்கான தீர்வுகாணும் விடயம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாத்திரம் ஏகபோக உரிமையானது அல்ல. அதில் அக்கறையுடைய எவரும் பங்களிப்பை நேர்மையாகச் செய்வதில் தவறில்லை. எது எப்படி இருந்தாலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாறாக எந்த அமைப்பபையும் உருவாக்கும் எண்ணம் எனக்கு இல்லை. தொடர்ந்தும் நான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலேயே இருந்து செயற்படுகின்றேன். என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கூட்டமைப்பு எதிராக ஒரு கூட்டணி?

எதிர்கால அரசியல் குறித்தே கலந்துரையாடப்பட்டது – உதயராசா

Related Posts