Ad Widget

புடினுக்கு எதிராக மாறிய வாக்னர் குழு! கடும் அதிர்ச்சியில் புடின்

ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் குழு அந்நாட்டுக்கு எதிராகவே திரும்பியதால் ஜனாதிபதி புடின் அதிர்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் மாஸ்கோவை விட்டு தனி விமானத்தின் மூலம் அவர் வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

முன்னாள் ரஷ்ய அதிகாரியான டிமிட்ரி உக்டின் மற்றும் புடினின் முன்னாள் தலைமை சமையல் நிபுணரான யெவ்ஜெனி ப்ரிகோஜின் இணைந்து 2014ம் ஆண்டு வாக்னர் ஆயுதக்குழுவை உருவாக்கினர்.

2022ம் ஆண்டு முதல் ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் இறங்கிய வாக்னர் குழுவில் 50,000க்கும் மேற்பட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது.

புடினின் சொந்த ராணுவமாக கருதப்படும் வாக்னர் குழு கொடூர கொலைக்காரர்கள், ஈவு இரக்கமற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடக்கத்தில் 5000 பேருடன் ரகசியமாக செயல்பட்டு வந்ததாகவும், 2015ம் ஆண்டுக்கு பின்னர் மத்திய கிழக்கு நாடுகளில் அரசுக்கு ஆதரவாக செயல்பட களமிறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதாவது நிதி வழங்குனர்களுக்கு ஆதரவாக செயற்படக்கூடியவர்கள். இந்நிலையில் ரஷ்ய ராணுவத்தில் உயர் அதிகாரியாக இருப்பவர்களுக்கும், வாக்னர் குழுவுக்கும் இடையேயான மோதலே ரஷ்யாவுக்கு எதிராக இவர்கள் திரும்ப காரணம் என கூறப்படுகிறது.

மேலும் வாக்னர் குழு ரஷ்ய ராணுவ ரகசியங்கள் பற்றி தெளிவாக தெரிந்து கொண்டிருப்பதால் மோதல் தீவிரமாக வெடிக்கலாம் அச்சம் நிலவி வந்த நிலையில் ஜனாதிபதியின் தலையீடால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts