பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் 24ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற தொடர் கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் நிமித்தம், பிள்ளையானை எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (13) உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான், இன்று காணொளி இணைப்பின் ஊடாக (Video Conference) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போதே நீதிமன்றம் பிள்ளையானுக்கு விளக்கமறியலை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Posts