Ad Widget

பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் இன்று யாழ் விஜயம்

பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வருகிறார். இவரது வருகைக்காக யாழ். மாவட்டத்தில் பொலிஸ் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

david-cameron

பிரிட்டன் பிரதமர் ஒருவர் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும்.

கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கெடுப்பதற்காக பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் நேற்று வியாழக்கிழமை இரவு கொழும்பை வந்தடைந்தார். இந்தியாவிலிருந்து விசேட விமானம் மூலம் இலங்கைக்கு அவர் வருகை தந்தார்.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கும் கமரூன், இன்று நண்பகல் கொழும்பிலிருந்து இரண்டு “அன்ரனோவ்’ ரக விமானம் மூலம் பலாலியைப் பிற்பகல் 2 மணியளவில் வந்தடைவார். அவருடன் பிரிட்டன் ஊடகவியலாளர்கள் 30 பேர் வரை வருகை தருகின்றனர்.

பலாலியிருந்து விசேட உலங்கு வானூர்தி மூலம் புறப்பட்டு யாழ். துரையப்பா விளையாட்டரங்கை பிற்பகல் 3 மணிக்கு வந்தடையும் கமரூன், உடனடியாக யாழ். பொதுநூலகத்துக்குச் சென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், வடக்கு மாகாண சபை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளார்.

இதன் பின்னர் வலி. வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்துக்கும் அவர் பயணம் மேற்கொள்வார்.

Related Posts