Ad Widget

பிரதான வீதிகளில் பாதுகாப்பு குறியீடு அமைக்கும் பணிகள் ஆரம்பமாகின

IMG_2645பிரதான வீதிகளில் பாதுகாப்புக் குறியீடுகள் மற்றும் பாதசாரிக் கடவைகள் என்பன அமைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையால், ஒப்பந்தகாரர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாகவே இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று வீதி திட்டப் பணிகளுக்கு பொறுப்பான திட்டப் பணிப்பாளர் மோறம் மரியதாஸன் தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில் 4 பிரதான வீதிகளும் அகலிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டு வருகின்றன.

ஏ9 வீதி, யாழ்.பலாலி வீதி, யாழ்.காங்கேசன்துறை வீதி, யாழ்.பருத்தித்துறை வீதி என்பனவே புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றன. வீதி அகலிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரே, வீதிகளில் பாதுகாப்பு கடவைகள், பாதுகாப்புக் குறியீடுகள் என்பன அமைக்கப்படும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த வருடம் இடம்பெற்ற பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் மக்களால் பாதுகாப்புப் குறியீடுகள் அமைக்குமாறு பலதடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இருந்த போதிலும் வீதி அகலிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரே அவை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வீதிக்குறியீடுகள், பாதசாரிக் கடவைகள் என்பவற்றை முன்னுரிமை அடிப்படையில் அமைக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையால், வீதிதிருத்த வேலைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களிடம் வேண்டு கோள் விடுக்கப்பட்டது.

இதற்கமைய வீதிக்குறியீடுகள் அமைக்கும் பணிகள் ஒப்பந்தகாரர்கள் மூலம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சகல பிரதான வீதிகளிலும் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related Posts