Ad Widget

பிரதமராக பதவியேற்ற பின்னர் சங்கத்தினரின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டார் மஹிந்த ராஜபக்ச

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் புதிய பிரதமராக பதவியேற்ற பின்னர், மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (2020.08.09) பிற்பகல் நாராஹேன்பிட அபயராம, பெல்லன்வில்ல ரஜ மஹா விகாரை மற்றும் பெபிலியான சுனேத்ராதேவி மஹா பிரிவேனா ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்து சங்கத்தினரின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டார்.

நாராஹேன்பிட அபயராம விகாரைக்கு விஜயம் செய்த பிரதமர், மேல் மாகாணத்தின் தலைமை சங்கநாயக்கர், வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு உந்து சக்தியாக செயற்படுவதுடன், நாட்டை கட்டியெழுப்புவதற்கான வலிமையும் பிரதமருக்கு கிடைக்க வேண்டும் என அங்கு அனுசாசனம் நிகழ்த்திய வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

மக்கள் இலங்கையிலேயே அதிக விருப்பு வாக்குகளை உங்களுக்கு வழங்கியமைக்கு காரணம் உங்கள் மீது அவர்கள் கொண்டுள்ள அதீத நம்பிக்கையே ஆகும். ஒரு நாள் இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் உங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்ற எண்ணம் நீங்கள் 2015 ஆம் ஆண்டு வெளியேறிய போதிலிருந்து மக்களுக்கு இருந்தது.

சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு உந்து சக்தியாக செயற்படும் வகையில் நீங்கள் இன்று பிரதமராக பதவியேற்றுக் கொண்டீர்கள். உங்களை ஒரு விவாதத்திற்கு அழைத்து வர சிலர் பயந்த ஒரு காலம் இருந்தது, இன்று உங்களுக்குப் பின்னால் வருவதற்கு நிறைய பேர் இருகிறார்கள்,

நீங்கள் இந்த நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். அன்று நீங்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் சென்றபோது உங்களை பார்ப்பதற்காக பலர் பேருந்துகளில் தங்காலைக்கு வருகை தந்தனர். உங்களை சுற்றி இருந்தவர்கள் எந்த பக்கம் சாய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள், எனவே உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், அவர்கள் வருவது நல்லதற்கல்ல. இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப உங்களுக்கு வலிமை கிடைக்கட்டும்.

நாட்டைக் கட்டியெழுப்ப தேவையான அனைத்தும் எமக்கு கிடைக்கட்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம். மக்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய ஒரே நபர் நீங்கள் தான் என்று வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கூறினார். பிரதமரை ஆசீர்வதிப்பதற்காக ஒரு போதி பூஜையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பின்னர் பெபிலியான சுனேத்ராதேவி மஹா பிரிவேனாவிற்கு சென்ற பிரதமர், பிரிவேனாவின் விகாராதிபதி, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரரிடம் ஆசீர்வாதங்களைப் பெற்றார். சுனேத்ராதேவி பிரிவேனாவில் புதிதாக கட்டப்பட்ட தந்த தாது மண்டபத்தில் முதலாவது மலர் பூஜை பிரதமரால் நிகழ்த்தப்பட்டது.

தொடர்ந்து பெல்லன்வில ரஜமஹா விகாரைக்கு சென்ற பிரதமர், விகாராதிபதி கலாநிதி பெல்லன்வில தம்மரதன தேரரிடம் ஆசீர்வாதங்களைப் பெற்ற பின்னர், மத வழிபாடுகளில் ஈடுபட்டார். நுகேகொடயில் பிரதமரால் தொடங்கப்பட்ட எதிர்பாராத அதிகார போராட்டம் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்று பெல்லன்வில தம்மரதன தேரர் கூறினார்.

இந்த முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல தகுதியுடையவர்கள் என்று தெரிகிறது என்றும், நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி உட்பட புதிய நாடாளுமன்றக் குழுவுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்றும் பெல்லன்வில தம்மரதன தேரர் குறிப்பிட்டார்.

பிரதமர் நேற்று (2020.08.09) காலை களனி ரஜமஹா விகாரையில் புதிய பிரதமராக பதவியேற்ற பின்னர், பேலியகொடாவில் உள்ள வித்தியாலங்கார பிரிவேனா மற்றும் ஹூபிட்டிய, கங்காரம விகாரைகளுக்கு சென்று ஆசீர்வாதம் பெற்றார்.

Related Posts