Ad Widget

பிரதமராக கடமைகளை பொறுப்பேற்றார் ரணில்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இலங்கையின் 26ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இந்த பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ முன்னிலையில் ,ரணில் விக்கிரமசிங்க நேற்று (12) பிற்பகல் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் மூலம், உலக அரசியல் வரலாற்றில் உலக சாதனை படைத்துள்ளார்.

உலகில் ஆறு முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அரசியல்வாதி இவர்தான். சுதந்திர இலங்கையின் 26வது பிரதமராக, ரணில் விக்கிரமசிங்க நேற்று (12) பதவியேற்றார். , இதன் மூலம் இலங்கையின் பிரதமராக நேற்று (12)ஆறாவது முறையாக பதவி ஏற்றுள்ளார்.

20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரம் பெற்ற ஜனாதிபதியின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனானஅரசாங்கம் இருந்த வேளையில் தனியொரு பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பிரதமரானார் என்பதும் குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.

Related Posts