Ad Widget

பிரச்சினைகளுக்கு ஒரே இரவில் தீர்வு காண முடியாது – டக்ளஸ்

பிரச்சினைகள், கோரிக்கைகளுக்கு ஒரே இரவில் தீர்வுகளை காணமுடியாது. ஆனாலும் தீர்வு காண முடியுமென்ற நம்பிக்கை இருக்கிறது என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

daa

இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய சாலைகளை மேம்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்திட்டங்கள் குறித்த விசேட கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கொழும்பில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் தலைமைக்காரியாலயத்தில் மேற்படி கலந்துரையாடல் நேற்றயதினம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது யாழ்ப்பாணம், காரைநகர், பருத்தித்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஏழு சாலைகளிலும் காணப்படும் பிரச்சினைகள் குறைபாடுகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், நடைமுறை நிர்வாகம் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சட்டதிட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இதனிடையே குறித்த சாலைகளில் காணப்படும் உடனடி மற்றும் ஏனைய தேவைகளின் அடிப்படையில் ஆராய்ந்து அவற்றுக்கு முன்னுரிமையடிப்படையில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென இலங்கை போக்குவரத்துச் சபைத் தலைவர் சசிவெல்கம தெரிவித்தார்.

அத்துடன், குறித்த ஏழு சாலைகளுக்கும் புதிதாக தலா 10 பேருந்துகள் வீதம் 70 பேருந்துகள் கிடைக்கப்பெறும் அதேவேளை, அவற்றின் ஊடாக சாலைகளின் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் அதேவேளை, அதனூடாக ஊழியர்களினதும் சாலைகளினதும் நல மேம்பாட்டு செயற்திட்டங்களை முன்னெடுப்பது குறித்தும், சாலைகளில் காணப்படும் ஆளணி மற்றும் ஏனைய முக்கிய தேவைப்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

சாலைகளிலுள்ள தேவைகளை இனம்கண்டு அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் திட்டங்களை தமக்கு சமர்ப்பிக்குமாறு சபைத் தலைவர் சாலைகளின் பிரதிநிதிகளிடம் கேட்டுக் கொண்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சாலைகளின் தேவைப்பாடுகள் நியாயத்தினதும் சட்டதிட்டங்களினதும் அடிப்படையில் தீர்வு காண்பதற்கு வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முழுமையான பங்களிப்புகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

இதில் இ.போ.சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளர் அஸ்ஹர், வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியச் சங்கத் தலைவர் புவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Posts