Ad Widget

பிரசல்ஸில் தாக்குதல் நடத்தியவர்களின் புகைப்படம் வெளியீடு: உயிருடன் தப்பிய தீவிரவாதியை பிடிக்க தேடுதல் வேட்டை

பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் மூவரின் படத்தை வெளியிட்டுள்ள போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.

brasil-IIS

பிரசல்ஸில் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்நிலையில் சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் தாக்குதலில் ஈடுபட்டதாக கருதப்படும் 3 தீவிரவாதிகளின் படத்தை வெளியிட்டுள்ள அந்நாட்டு போலீசார், நாடு தழுவிய தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.

3 தீவிரவாதிகளில் ஒருவன் உயிருடன் இருப்பதால், அவன் ஏதேனும் நாச வேலையில் ஈடுபடலாம் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சில தீவிரவாதிகள் பெல்ஜியத்தில் ஊடுருவி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து பிரசல்ஸில் முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. தாக்குதலுக்கான ரயில் நிலையம் தற்போது திறக்கப்பட்டாலும் அதன் அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீளவில்லை.

இந்த தாக்குதலுக்கு ஐநா பொதுச்செயலாளர், அமெரிக்க அதிபர் ஒபாமா, ஃபிரன்ச் அதிபர் கொலம்பி, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரோன் உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Posts