Ad Widget

பிணை எடுக்க ஆளில்லையாம்; ரெக்சியன் கொலை சந்தேக நபர்கள் தொடர்ந்தும் சிறையில்

யாழ். மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட முன்னாள் வடக்கு மாகாண சபையின் எதிரக்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனை பிணை எடுக்க ஆளில்லாதமையால் தொடர்ந்தும் சிறையில் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kamal

நெடுந்தீவுப் பிரதேச சபைத் தலைவர் தானியல் றெக்சியனின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்டார்.

கொலையுடன் சம்பந்தப்பட்டவர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கமல் மற்றும் ரெக்சியனின் மனைவி அனிதா ஆகியோரை கடந்த வெள்ளிக்கிழமை மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தது.

எனினும் நீதிமன்று பிணை அனுமதி வழங்கியபோதும், பிணை எடுப்பதற்கு எவரும் முன்வராத நிலையில் அவர்கள் தொடர்ந்தும் சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் றெக்சியன் கொலை வழக்கு நேற்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சந்தேக நபர்கள் இருவரையும் பிணை எடுக்க யாரும் முன்வராத நிலையில் அவர்களை செப்ரெம்பர் 16ஆம் திகதிவரை சிறைக் காவலில் வைக்குமாறு நீதவான் எஸ் . லெனின்குமார் உத்தரவிட்டார்.

மேலும் 2ஆவது சந்தேகநபரான முச்சக்கர வண்டி சாரதி லண்டன் யசிந்தன் தொடர்ந்தும் விளக்கமறியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts