Ad Widget

பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தியின் வாகனம் விபத்து

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துறை விநாயகமூர்த்தி பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அவரது வாகனம் மாரவில – கோடவேல சந்தியில் வைத்து வேன் ஒன்றுடன் மோதியதில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது இரு வாகனங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மாரவில் பொலிஸின் மோட்டார் வாகனப் பிரிவினர் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts