Ad Widget

பாலியல் வன்முறைக்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

girls-proபெண்கள் மற்றும் சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களை கண்டித்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை பெண்கள் செயற்பாட்டு இயக்கத்தினர் இன்று காலை 10 மணியளவில் மேற்கொண்டனர்.

யாழ். மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள் தற்போது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அண்மையில் கடற்படை சிப்பாயினால் சிறுமிகள் இருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என குற்றஞ்சாட்டப்பட்டு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

குறித்த வழக்கு இன்று யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனையடுத்து குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

DSCF1383

DSCF1387

இதன்போது “பாலியல் பலாத்கார கொலைகளை எப்பொழுது இல்லாமல் ஆக்குவோம்” , ” சட்ட அமுலாக்கம் எங்கே அதை உறுதிப்படுத்துபவர்கள் எங்கே? ” பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கும் படி நீதி கோருகிறோம்., ” நாம் ஒவ்வொருவரும் சமூக பொறுப்புடையவர்களாக செயற்படுகின்றோமா?” , ” எனது வேதனை உனக்கு புரியவில்லையா? ” , ” எனது மகள் மைதிலியின் கொலைகாரனைக் கண்டு பிடியுங்கள்” போன்ற வாசங்களை தாங்கியவாறு பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Posts