Ad Widget

பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட நிதி கிடைக்காது!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி இல்லாதொழிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று (10) ஆரம்பமான செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், மக்களுக்கான சேவையை அலட்சியம் செய்வோருக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதி அவசியமில்லை என குறிப்பிட்ட பிரதமர் தமது பிரதேசத்தில் சிறு சிறு வைபவங்களுக்கு முக்கியத்துவமளித்து பாராளுமன்றத்துக்கு சமுகமளிக்க முடியாதோர் மாகாண சபையிலோ அல்லது பிரதேச சபையிலோ பதவி வகிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் சிறந்ததொரு பாராளுமன்றம் அமைய வேண்டும் என எதிர்பார்த்தே வாக்களித்தனர். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் ஏனைய கட்சிகளானாலும் அனைத்துமே மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலேயே செயற் படுவது அவசியமாகிறது. பாராளுமன்ற த்தைப் பலப்படுத்தும் பொறுப்பு அனைவருக்கும் உரியது.

நாம் தேசிய அரசாங்கத்தை அமைத்து முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக்கி யுள்ளோம். இது ஒரு முக்கியமான விடயம் என்பதை குறிப்பிடவிரும்புகிறேன்.

இதற்கிணங்க பாராளுமன்றத்திற்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து உறுப்பினர்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இடம்பெறும் இரண்டு நாள் செயலமர்வில் பங்குபற்றுவோர் தொடர்பில் பெயர் விபரங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு நான் சபாநாயகரைப் பணித்துள்ளேன். இதற்கிணங்க இதில் பங்கேற்காத புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்குச் சேவை செய்வதற்கே நியமிக்கப்பட் டுள்ளனர். அது இடம்பெறாவிட்டால் அவர்களுக்குப் பன்முகப்படுத்தப்பட்ட நிதி வழங்குவதில் பிரயோசனமில்லை என்றே நான் நினைக்கின்றேன்.

பாராளுமன்றத்தை முதல் வருடத்தில் முறைப்படுத்த வேண்டிய அவசியம் தொடர்பில் ஜனாதிபதியும் நானும் சபாநாயகரும் பிரதி சபாநாயகரும் கலந்துரையாடியுள்ளோம். ஏனெனில் இலங்கையின் பாராளுமன்றம் ஆசியாவி லேயே பழைமையான பாராளுமன்ற மாகும். 1935 ல் அரசியலமைப்பிற் கிணங்கவே இந்த பாராளுமன்றம் முறைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்காலத்தில் சர்வாதிகார பாராளுமன்ற மாகவே இது செயற்பட்டுள்ளது. இதை விட பிரித்தானிய பாராளுமன்ற முறை மேலும் பழைமையானதாகும். பின்னர் பலமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

எமது பாராளுமன்றத்தைப் பொறுத் தவரை 1947, 1972, 1978 ஆகிய அரசியலமைப்புக்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையைக் கொண்டவை. 2001-2004 வரை பாரா ளுமன்றமே நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டிருந்தது.

அதன் பின்னர் பாராளுமன்ற அதிகா ரங்கள் குறைந்து நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரம் அதிகரித்தது. 19 வது அரசிய லமைப்புத் திருத்தத்தின்படி பாராளுமன்ற அதிகாரம் நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரம் என அதிகாரங்கள் இதற்கிணங்க சுயாதீன ஆணைக் குழுக்களும் ஏற்படுத்த ப்பட்டுள்ளன. எனினும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் தற்போது மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயமே உள்ளது. பாராளுமன்ற வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வதும் சலுகைகளைப் பெற்றுக் கொள்வதுமே பாராளுமன்ற உறுப்பினர்களின் வாடிக்கையாக உள்ளது. என்றே மக்கள் கருதுகிறார்கள்.

இதில் ஆளும் கட்சி என்றோ எதிர்க் கட்சி என்றோ பிரித்துப் பார்க்க முடியாதுள்ளது. இந்த நிலையைத் தொடருவதா அல்லது மாற்றம் ஏற்படுத்துவதா என்பது பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும். அனைவருக்குமே பாதுகாப்பு அவசிமா என்பதும் சிந்திக்க வேண்டியுள்ளது. யுத்தச் சூழல் முடிவடைந்து விட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது நடத்தைகளில் கவனம் செலுத்துவது முக்கியமாகும்.

இது தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பிரச்சினைகள் இருந்தால் கட்சியின் பிரதம கொரடாவுக்கு தெரிவித்து கலந்துரையாடி தீர்க்க முடியும். அவ்வாறில்லாவிட்டால் இவற்றை வைத்து ஊடகங்கள் விமர்சிக்கும் அந்த விமர்சனம் சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் அவதானமாக இருக்க வேண்டும். எமக்கு பல குற்றச் சாட்டுக்கள் தற்போதுள்ளன. பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் செயற்படுவது தொடர்பில் பல விமர்சனங்கள் உள்ளன.

நாம் அடுத்த வருடத்திற்குள் பாராளு மன்ற அமர்வுகளை மீண்டும் நேரடி ஒளிபரப்புச் செய்யத் தீர்மானித்துள்ளோம். தொடர்ச்சியாக அந்த செயற்பாடு முன்னெடுக்கப்படும். அப்போது மக்கள் தமது உறுப்பினர்கள் பற்றியும் அவர்கள் பாராளுமன்றத்திற்கு சமுகமளித்துள் ளார்களா என்பதையும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் முதலில் பாராளுமன்றத்துக்கு சமுகமளிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதை விடுத்து தமது பிரதேசங்களிலுள்ள திருமண, மரண வீடுகளுக்குச் செல்வதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமானால் அத்தகையோர் தயவு செய்து மாகாண சபையையோ பிரதேச சபையையோ தமக்காக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

எந்த சுபவேளையில் பங்கு பற்றுவ தற்காகவும் பாராளுமன்றத்துக்கு வருகை தருவதை தவிர்க்க முடியாது. சபை அமர்வுகள் தவிர்ந்த நேரங்களில் மிகச் சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ள காலத்தை உறுப்பினர்கள் பயன்படுத்தி தமது அறிவைப் பெருக்கிக் கொள்ள முடியும்.

நாம் நினைக்கின்றோம் அரசொன்றை கவிழ்க்க நம்பிக்கையில்லா பிரேரணைக் கொண்டுவரப்பட வேண்டும் என்று. எனினும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை யொன்றின் மூலமும் அரசாங் கத்தைக் கவிழ்க்க முடியும். யுத்தக் காலத்தில் நோர்வேயில் இதுபோன்று நடந்துள்ளது. இதுபோன்று பலவிடயங் களை நாம் அறிய வேண்டியுள்ளது. எமக்குப் பாரிய செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக்க வேண்டுமானால் தெரிவுக்குழுக்கள் நியமிக்கப்படுவதுடன் பாராளுமன்றத் திற்கென வரவு செலவு அலுவலகம் ஒன்றையும் ஏற்படுத்த வேண்டியுள்ளது. தெரிவுக் குழுக்களில் அனைத்துத் தரப்பு உறுப்பினர்களுக்கும் மேற்கொள்ள வேண்டிய விடயங்களுள்ளன. ஜனநாயகம் என்பது அதற்குட்பட்ட நிறுவனங்களை அதற்கேற்ப செயற்படுத்துவ துமாகும். அரசாங்கத்தைப் போன்றே அமைச்சரவை மற்றும் பாராளுமன்றம் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டும். யுத்தத்தின் பின்னடைவுகளை நாம் மீளக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.

நாம் தற்போது தேசிய அரசாங்கத்தில் செயற்படுகிறோம் என்ற சிந்தனை முக்கியமானது ஜே.வி.பி.யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எமக்கு ஆதரவளிக்கும். எதிர்க்க வேண்டியவற்றை எதிர்க்கும், ஆதரிக்க வேண்டியவற்றை ஆதரிக்கும். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாராளு மன்ற உறுப்பினர்களில் பொறுப்புடன் செயற்படுபவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சிகளை மேற்கொள்ளவும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றக் கட்டடத்தில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts