Ad Widget

பாரவூர்தி உரிமையாளர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும் – யாழ். அரச அதிபர்

dak-suntharam-arumainayagam-GAமணல் அள்ளும் பிரதேசங்களை அடையாளப்படுத்துவது தொடர்பில் புவிச்சரிதவியல் திணைக்களம் பரிசீலனை மேற்கொண்டுள்ள நிலையில், யாழ். மாவட்ட பாரவூர்தி உரிமையாளர்களுக்கு சாதகமான பதில் கிடைக்குமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட பாரவூர்திச் சங்கத்தில் 700 இற்கும் மேற்பட்ட பாரவூர்தி உரிமையாளர்கள் உள்ளதுடன், இவர்கள் தொழில் வாய்ப்பின்றி உள்ளதாகவும் சுந்தரம் அருமைநாயகத்தின் கவனத்திற்கு பாரவூர்திச் சங்கத் தலைவர் ச.ஜெயக்குமார் கடந்த டிசெம்பர் மாதம் 15ஆம் கொண்டுவந்திருந்தார்.

இதன்போது, மணல் ஏற்றிப் பறிப்பதற்கு அறவிடப்படும் வழமையான கட்டணத்தை விட 3,000 ரூபாவுக்கு குறைவான கட்டணத்தில் சேவை வழங்கத் தயார் எனவும் இவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக புவிச்சரிதவியல் திணைக்களத்தின் கவனத்திற்கு தான் கொண்டுவந்ததாகவும் அவர்கள் மணல் அள்ளும் இடங்களை அடையாளப்படுத்தியும் யாழ். மாவட்ட பாரவூர்தியாளர் சங்கத்தின் பிரச்சினைகள் பற்றியும் பரிசீலனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் நேற்று வியாழக்கிழமை கூறினார்.

இதனால், சாதகமான பதில் கிடைக்குமென்ற எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

மணல் அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டால், அப்பகுதியின் அபிவிருத்திக்கு பாரவூர்தி உரிமையாளர்கள் பங்களிக்க வேண்டும் என உரிமையாளர்களிடம் கேட்டிருந்தேன். அதற்கு பாரவூர்தி உரிமையாளர்கள் உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.

Related Posts