Ad Widget

பாரவூர்தி உரிமையாளர்களின் பேரணியில் இராணுவ புலனாய்வாளர்

யாழில் புதன்கிழமை (22) நடைபெற்ற யாழ்.மாவட்ட பாரவூர்தி சங்க உரிமையாளர்களின் ஆர்ப்பாட்ட பேரணியை புகைப்படம் பிடிக்க முற்பட்ட இராணுவப் புலனாய்வாளருக்கும் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

பேரணியில் கலந்து கொண்டவர்களை தனித்தனியாக படம் எடுக்க ஒருவர் முற்பட்டமையை அவதானித்த பேரணியில் கலந்து கொண்டவர்கள், அவரிடம் நீங்கள் ஊடகவியலாளரா என கேட்டபோது, அவர் அதற்கு மறுத்து தன்னை புலனாய்வாளன் என அடையாளப்படுத்தினார்.

தங்களைப் புகைப்படம் எடுக்கவேண்டாம் என பேரணியில் கலந்துகொண்டவர்கள் கூறியதையடுத்து அந்நபர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

மகேஸ்வரி நிதியத்துக்கு மணல் ஏற்றி செல்வதற்கு தாங்கள் வழங்கிய வைப்புப்பணம் மற்றும் ஏற்றி இறக்கும் போது. வழங்கிய கட்டுப்பணம் என 19,775 மில்லியன் ரூபாய் பணத்தை தங்களிடம் வழங்குமாறு கோரி யாழ். மாவட்ட பாரவூர்தி சங்கத்தினர் புதன்கிழமை (22) ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

Related Posts