Ad Widget

பாதையையும் மறித்து முல்லைத்தீவில் தமிழ்மக்களின் காணிகள் அபகரிப்பு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயிலிருந்து கோட்டைக் கேணியூடாக மணலாறு மண்கிண்டி மலைக்குச் செல்லும் பாதைக்கு குறுக்காக முள்வேலிகள் அமைக்கப்பட்டு நில அபகரிப்பு இடம்பெறுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

kokkutoduwai - mullithththevu-vely

மத்திய அமைச்சர் ஒருவரின் உறவினர்ககள் சிலரே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மகாவலி – ‘எல்’ வலயம் என்கிற போர்வையில் வர்த்தக நோக்கத்துடன் தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. தென்னை, மாமர செய்கைக்கு என்று 33 சிங்களவர்களுக்கு தலா 25 ஏக்கர் வீதம் மொத்தமாக 325 ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டு வேலிகள் இடப்பட்டுள்ளன. இதற்காக தலா 3 லட்சம் ரூபா முற்பணம் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரியவருகிறது.

இக்காணிகள் உப உணவுப் பயிர்ச் செய்கைக்காக ஏற்கனவே தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதனை அபகரித்து தற்போது சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பொதுமக்கள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனின் கவனத்துக்கு கொண்டுவந்ததை அடுத்து அப்பகுதியை நேரில் சென்று அவதானித்த அவர், நில அபகரிப்பை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்று திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts