Ad Widget

பாதுகாப்பு வலயம், பாலியல் பிரச்சினைகள் உள்ளிட்ட பல சவால்களுக்குள் யாழ். மக்கள் – ஜோன் ரங்கின்

jhon-rankinயாழ்ப்பாண மக்கள் உயர் பாதுகாப்பு வலயம், பாலியல் ரீதியான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் எனப் பிரிட்டன் தூதுவர் ஜோன் ரங்கின் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை, இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜோன் ரங்கின் குழுவினர் வருகை தந்திருந்தனர்.

இந்தக் குழுவினர் யாழ். பொது நூலகத்துக்குச் சென்று நூல்களை அன்பளிப்புச் செய்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு முதலமைச்சர் ஆகியோரையும் இவர்கள் சந்தித்தனர்.

இதனைவிட வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள நலன்புரி நிலையங்களுக்குச் சென்று அந்த மக்களைச் சந்தித்த பின்னர் யாழ். மாவட்ட இராணுவத் தளபதியையும் பிரிட்டன் குழுவினர் சந்தித்திருந்தனர்.

பெண் தலைமைத்துவ குடும்பங்கள்

இந்தச் சந்திப்புக்கள் தொடர்பில் நேற்றுக் கருத்து வெளியிட்டுள்ள ஜோன் ரங்கின், இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்கள் உயர் பாதுகாப்பு வலயத்தினால் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பில் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதியுடன் தான் கலந்துரையாடினேன் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.குறிப்பாகப் பாலியல் ரீதியான வன்முறைகளை அவர்கள் எதிர்கொள்வதாகத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

என்னுடனான சந்திப்பில் கலந்து கொண்ட எவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் மீளவும் வரவேண்டும் என்று விரும்பவில்லை.இலங்கையில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதே அவர்களது விருப்பம் என்பதைச் சுட்டிக்காட்டினர் என்றும் தூதுவர் கூறியுள்ளார்.

Related Posts