Ad Widget

பாண் விலையில் மீண்டும் மாற்றம்!

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாணுக்கான விலையை குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி 450 கிராம் பாணின் விலை நேற்று நள்ளிரவு முதல் 1ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

முன்னதாக கடந்த 13ம் திகதி முதல் பாண் விலை 1 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 55 ரூபாவாக உயர்வடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று முதல் மீண்டும் 1ரூபாவினால் பாணின் விலை குறைக்கப்படவுள்ளது.

Related Posts