Ad Widget

பாடசாலை வசதி கட்டணம் அதிகரிப்பு

business-money-develpment-cashபாடசாலைகளில் மாணவர்களிடம் இருந்து பெறும் வசதிக் கட்டணத்தை அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பாடசாலை அபிவிருத்தி சங்கங்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கும் நோக்கமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மாணவர்களிடம் இருந்து 50 ரூபா வரை அறவிடவுள்ளதாகவும் இதனை பாடசாலை அபிவிருத்தி சங்கங்களே மாதாந்த வசதிக் கட்டணத்தை தீர்மானிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்

எவ்வாறாயினும் அதிகரிக்கப்பட்ட வசதிக் கட்டணத்தை செலுத்த முடியாத மாணவர்கள் கிராம உத்தியோகத்தரின் சான்றிதழை சமர்ப்பிப்பதன் மூலம் அதிலிருந்து விடுபட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இதுவரை மாணவர்களிடம் இருந்து மாதாந்த வசதிக் கட்டணமாக ஐந்து ரூபா மாத்திரமே அறவிடப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.

Related Posts