Ad Widget

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ளது. அதன்படி இன்று (28), நாளை (29) மற்றும் நாளை மறுதினமும் (01) அதிக வெப்பமான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் வௌிப்புற செயற்பாடுகளை தவிர்க்குமாறு மாணவர்களுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, எந்தவொரு பாடசாலையிலும் பயிலும் மாணவர்கள் அதிக வெப்பநிலையின் போது வெளிப்புற விளையாட்டு பயிற்சி நடவடிக்கைகள் அல்லது விளையாட்டு நிகழ்வுகள் அல்லது வேறு எந்த வெளி நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும்,இது தொடர்பில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்குமாறு மாகாண மற்றும் பிராந்திய கல்வி அதிகாரிகளுக்கு ஏற்கனவே பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் சுகாதார அமைச்சும் கல்வி அமைச்சும் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts