அச்சுவேலி பத்தமேனி இரத்தினேஸ்வரி வித்தியாலயத்தின் கணினி அறையில் இருந்த 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான கணினிகளின் பாகங்கள் ஞாயிற்றுக்கிழமை (14) இரவு திருடப்பட்டுள்ளதாக, வித்தியாலய அதிபர் திங்கட்கிழமை (15) முறைப்பாடு பதிவு செய்துள்ளதார் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
கணினி அறையின் ஓடுகளை பிரித்து உள் நுழைந்தே இந்த திருட்டு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
அதிபர் திங்கட்கிழமை (15) காலையில் பாடசாலைக்கு சென்று பார்த்த வேளையிலேயே பாடசாலையில் திருட்டுப்போன விடயம் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினார்கள்.