Ad Widget

பாடசாலைகளின் அசமந்தப் போக்கினால் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் கிடைப்பதில்லை – ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர்

NIcபாடசாலை மாணவர்களுக்கு விரைவாக அடையாள அட்டைகளை வழங்குவதற்கு பல்வேறு புதிய வேலைத்திட்டங்களை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துகின்ற போதும் அவர்களின் அசமந்தப் போக்கினால் உரிய காலப்பகுதியில் விண்ணப்பங்கள் கிடைப்பதில்லை என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்தார்.

ஆட்பதிவு திணைக்களத்தின் வட பிராந்திய காரியாலய அலுவலகம் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் நிதியுதவியில் நேற்று வவுனியா மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இந்த வருட ஜனவரி மாதத்தில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் கல்வி அமைச்சின் செயலாளர்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்குவது தொடர்பில் புதிய வேலைத்திட்டம் ஒன்றை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம் என்பதினை தெரியப்படுத்தியிருந்தோம்.எனினும் கவலைக்குரிய விடயமாக இதுவரையில் எமக்கு 4000 விண்ணப்பங்களே கிடைத்துள்ளன. உண்மையில் இதுவரையில் எமக்கு இரண்டு லட்சம் விண்ணப்பங்களை கிடைத்திருக்க வேண்டும்.

இந்த நிலையில் ஆட்பதிவு திணைக்களம் புதிய பொறிமுறையை அறிமுகம் செய்தது. எனினும், இது தொடர்பில் உரியவர்கள் எடுக்கும் கவனம் மிக போதாததாக இருக்கின்றது.

சட்ட ஏற்பாடுகளின் ஆரம்பத்தில் 18 வயதை பூர்த்தி அடைந்தவர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளபோதிலும்இ 1981ஆம் ஆண்டின் சட்டத் திருத்தத்தின் பிரகாரம் 16 வயதை பூர்த்தி செய்கின்ற ஒருவர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும் – என்றார்.

Related Posts