Ad Widget

பாக்கு விரிகுடாவில் மீன்பிடி முரண்பாடு; கருத்தரங்கு யாழ்.பல்கலைக்கழகத்தில்

jaffna-universityபாக்கு விரிகுடாவில் மீன்பிடித்துறை முரண்பாடுகளை தீர்த்துக்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு கட்டமைப்புக்கும் உணர்வூட்டலுக்குமான கருத்தரங்கு ஒன்று எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பூகோளவியல் பிரிவில் நடைபெறவிருக்கின்றது.

இந்தக் கருத்தரங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பூகோளவில் துறை, றுகுணு மற்றும் நெதர்லாந்தின் அம்ஸ்ரர்டாம் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்துகின்றன.

அன்றையதினம் காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 4 மணிவரை நடைபெறவிருக்கும் நிகழ்வுகளுக்கு யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வார்.

கௌரவ விருந்தினராக ருகுணு பல்கலைக்கழக துணைவேந்தர் சுசிரித் மென்டிஸ் வருகை தருவார். 9.10 தொடக்கம் 9.20 வரை அம்ஸ்ரர்டாம் பல்கலைக்கழக பேராசிரியர் மார்ட்டன் பலிங்க்க கருத் தரங்கின் நோக்கங்களை விளக்கிப் பேசுவார்.

அதன்பிறகு முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்வதில் பல்கலைக்கழகங்களின் பங்கு பணி குறித்து றுகுணு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் சுசிரித் மென்டிஸ் பாக்கு விரிகுடாவில் காணப்படும் மீன்பிடி பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வது தொடர்பாக உரை நிகழ்த்துவார்.

அதைத் தொடர்ந்து தென் இந்திய மீன்பிடி சங்கங்களின் ஒன்றிய ஆலோசகர் வி.விவேகானந்தன் மீன்பிடி கூட்டமைப்புத் திட்டத்தின் பங்கு பணி பற்றியும் அதன் பெறுபேறுகள் பற்றியும் எடுத்துரைப்பார்.

தேநீர் இடைவேளைக்கு பின்னர் தொழில் நுட்பத்துறை கருத்துரை கலந்துரையாடல் இடம்பெறும். பின்னர் பாக்கு விரிகுடா மீன்பிடி முரண்பாடுகளின் ஆரம்பம் குறித்து றுகுணு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒஸ்கார் அமரசிங்கவும் பாக்கு விரிகுடாவில் இழுவைப்படகுகள் நுழைவதினால் ஏற்படும் வாழ்க்கைப் பிரச்சினைகள் மற்றும் அவைகளை தீர்த்துக் கொள்வதற்கான முயற்சிகள் குறித்தும் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் பேராசிரியர் ஏ.சூசை மற்றும் அம்ஸ்ரர்டாம் பல்கலைக்கழகத்தின் ஜோ எரி ஸ்சொல்டென்ஸ் கருத்துரைகளை வழங்குவார்கள்.

வடக்கு மீன்பிடி இணையத்தின் தலைவர் எஸ். தவரட்ணம், இந்திய இழுவைப்படகுப் பிரச்சினை யின் இன்றைய நிலையையும் அதனை எதிர்கொள்வதற்கான முயற்சிகளும் பற்றி உரை வழங்குவார்.

இதன் பின்னர் கலந்துரை யாடல்களின் பயன்பாடு குறித்து மீன்பிடி அமைச்சின் ஆலோசகர் டாக்டர் சுபசிங்க உரைநிகழ்த்துவார்.

Related Posts