Ad Widget

பாகிஸ்தான் பேருந்து ஓட்டுநரின் மகன் லண்டன் நகரின் மேயரானார்

பாகிஸ்தான் நாட்டில் பேருந்து ஓட்டுநராக  பணியாற்றியவரின் மகன் லண்டன் நகரின் புதிய மேயராக நியமிக்கபட்டுள்ளார். முஸ்லீம் ஒருவர் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பது இதுதான் முதல் முறையாகும்.

Pakistani-bus-drivers-son-Sadiq-Khan-

லண்டன் மேயருக்கான தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட சாதிக் கான், கன்சர்வேட்டிவ் சார்பில் போட்டியிட்ட ஜாக் கோல்ட்ஸ்மித்தை விட சுமார் ஒன்பது சதவீத வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

சாதிக் கானுக்கு முதல் சுற்றிலேயே சுமார் 44 சதவீத வாக்குகள் கிடைத்திருக்கும் நிலையில், அவர் லண்டன் மேயராக தேர்வாவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக கன்சர்வேடிவ் கட்சி லண்டன் மேயர் பதவியை தக்க வைத்துக்கொண்ட நிலையில், தற்போது தொழிற்கட்சி அந்த பதவியை மீண்டும் கைப்பற்றவுள்ளது.

தொழிலாளர் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின் டுவிட்டரில் சாதிக் கானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் கிழக்கு லண்டனில் உள்ள டூட்டிங் தொகுதி எம்.பியாக இருந்துவரும் சாதிக் கான், மனித உரிமை ஆர்வலராகவும், வழக்கறிஞராகவும் இருந்து வருகிறார்.

Related Posts