Ad Widget

பாகிஸ்தான் பள்ளிக் கூடத்தில் படுகொலை 141 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கே பெஷாவர் நகரில் தாலிபான் நடத்தியத் தாக்குதலில் குறைந்தது 132 பள்ளிக் குழந்தைகள் உட்பட 141 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தாக்குதல்கள் செவ்வாய் கிழமை மாலை முடிவுக்கு வந்தது.

pakistan_taliban_school

தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரையும் தாம் கொன்றுவிட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. பள்ளி வளாகத்தில் குண்டுகள் ஏதாவது இருக்கின்றதா என்பதை ஆராயும் பணி தற்போது நடந்து வருகிறது. பெஷாவர் பகுதியில் இராணுவத்தால் நடத்தப்படும் பள்ளிக்கூடம் ஒன்றைக் கைப்பற்றிய தாலிபான் தீவிரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலாவர்கள் சிறார்கள் என கைபர் பக்தூன்க்வாமாகாண முதல்வர் கூறினார்.

பாகிஸ்தான் இராணுவம் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களை நடத்துகிறது. இதில் இராணுவத்தினரின் குழந்தைகளே பெரும்பாலும் படிக்கின்றனர். இந்தப் பள்ளிக் கூடத்தில் 500 பேர் படித்து வந்தனர். கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த பள்ளி மாணவர்கள் 16 வயதுக்கும் குறைவானவர்கள். மாணவர்கள் சிலர் மேஜைகளுக்கு கீழே ஒளிந்து கொண்டும், செத்த பிணம் போல் கீழே விழந்து கிடந்தும் தீவிரவாதிகளிடமிருந்து தப்பியுள்ளனர். தாக்குதலில் தப்பி வந்த மாணவர்கள் பயத்தில் உறைந்திருந்தனர். அவர்களை படையினர் அரவணைத்து வெளியே அழைத்து வந்தனர்.

pakistan_raid_schoo

துப்பாக்கிதாரிகள் ஒவ்வொறு வகுப்பாக நுழைந்து கண்மூடித்தனமாக மாணவர்களைச் சுட்டுக் கொன்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். சிகிச்சை பெற்று வரும் பலரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், பலர் தலையில் சுடப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் மருத்துவர் தெரிவித்தார்.

school_under_attack_peshawar_pakistan

இந்த முற்றுகை மற்றும் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தானிய பாதுகாப்பு படையினர் முயற்சிகளை செய்து வருகின்றனர். மோதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தாக்குதல் நடத்திய அனைத்துத் தீவிரவாதிகளைத் தாம் கொன்றுவிட்டதாக பாகிஸ்தானிய ராணுவம் தெரிவித்துள்ளது.

வடக்கு வாசிரிஸ்தான் மற்றும் கைபர் பிராந்தியத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக அரசு எடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று பாகிஸ்தானியத் தாலிபானின் பேச்சாளர் கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதலை பாகிஸ்தானியப் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கண்டித்துள்ளார். அதிபர் ஒபாமா, இந்தியப் பிரதமர் மோடி, நோபல் பரிசு பெற்ற மலாலா உள்ளிட்ட பலரும் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்,

Related Posts