Ad Widget

பல்கேரியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர் 32 பேரும் சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

பல்கேரியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த இலங்கை பிரஜைகள் 32 பேர், அந்நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்டனர். அவர்கள், விசேட விமானத்தின் மூலமாக அவர்கள், செவ்வாய்க்கிழமை இரவு, நாடு திரும்பியுள்ளனர்.

அவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் (சி.ஐ.டி) ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இத்தாலிக்கு அழைத்துச் செல்வதாக கூறியே, அவர்களை மனித கடத்தல்காரர்கள் ஏமாற்றி, துருக்கிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கிருந்தே, பல்கேரியாவுக்கு அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.

நாடுகடத்தப்பட்ட இலங்கையர் 32 பேரின் பாதுகாப்புக்கு, பல்கேரியாவின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் 38 பேரும் வருகைதந்திருந்தனர் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு(விசா மற்றும் பிணைப்பு) நிர்வாக அதிகாரி டப்ளியு.எம்.எம்.பீ. வீரசேகர தெரிவித்தார்.

நாடு திரும்பிய 32 பேரிடமும், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டதன் பினனர், மேலதிக விசாரணைகளுக்காக அரச புலனாய்வு சேவையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதன் பின்னர் அவர்கள், குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related Posts