Ad Widget

பல்கலை. அனுமதி விண்ணப்பகாரர்களுக்கு பாடசாலை வழங்கும் எந்த ஆவணமும் தேவையில்லை!!

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் பாடசாலை மட்ட விண்ணப்பகாரர்கள் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக விண்ணப்பம் கோரும் பாடசாலையிலிருந்து எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்று பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்கள் பாடசாலை விடுகைச் சான்றிதழ், அதிபர்களின் சான்றிதழ் கடிதம் மற்றும் பரீட்சை சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை மாணவர்கள் பெற முடியாது.

எனவே, மாணவர்கள் பல்கலைக்கழக விண்ணப்ப படிவத்தை இணையத்தில் செய்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு அனுப்பவேண்டும். அவர்கள் தனிப்பட்ட தகவல்களை மட்டுமே நிரப்ப வேண்டும். பாடசாலை ஆவணங்களை சேர்க்க வேண்டிய அவசியமில்லை.

மாணவர்கள் தங்கள் சாதாரண நிலை பரீட்சை முடிவுகளையும் இணைக்க வேண்டியதில்லை.

அரச பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் தனியார் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை நிறைவு செய்ய கிராம அலுவலகரிடமிருந்து சான்றிதழ் பெற வேண்டியதில்லை.

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் சமர்ப்பிக்க தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யலாம்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவேண்டிய இறுதித் திகதி ஜூன் 11 ஆம் திகதியாகும் – என்றார்.

Related Posts