Ad Widget

பல்கலைக்கழக ஆசிரியர்களை விசேட பிரிவினராக வகைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் உயர்கல்வி சேவைத் துறையொன்றை உருவாக்குவதற்குமான அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைச்சரவை நேற்;று அங்கீகாரம் அளித்துள்ளது. இதனால் தற்போது நடைபெறும்  பல்கலைக்கழக ஆசிரியர்களின் பகிஷ்கரிப்பு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் உயர்கல்வி அமைச்சு முன்வைத்த கொள்கை ஆவணத்திற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரமளித்து. இதன்படி, பல்கலைக்கழக ஆசிரியர்களை பொதுச்சேவையில் விசேட பிரிவினராக வகைப்படுத்துவதற்கு அரசாங்கம் கொள்கையளவில் இணங்கியுள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையாக இது விளங்குகின்றமை குறிப்பிடத்தகக்து.

இது தொடர்பாக பல்கலைக்கழகத்துறை, பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழு மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினர் அடங்கிய குழுவொன்றை அரசாங்கம் நியமிக்கவுள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியர்களை விசேட பிரிவாக வகைப்படுத்துவதன் மூலம் உயர்கல்வித் தகைமை கொண்டவர்களை பல்கலைக்கழக அதிகாரிகளாக சேர்த்து அவர்களை சேவையில் தக்க வைத்துக்கொள்வதற்கும் தற்போது வெளிநாடுகளில் வசிக்கும் பல்கலைக்கழக ஆசிரியர்களை ஈர்ப்பதற்கும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, உயர்கல்வித் துறையில் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகள் குறித்து ஆராய்வதற்காக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

கல்வியாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக விசேட பட்டப்பின்படிப்பு நிறுவகமொன்றை ஐந்து வருடங்களுக்குள் நிறுவுவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பல்கலைக்கழக முறைமை சுமுகமாக இயங்குவதற்கு சுதந்திரம் மிக அவசியம் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. பல்கலைக்கழக உள் விவகாரங்களில் அரசாங்கம் தலையிடுவதாக மாணவர்களும் விரிவுரையாளர்களும் முன்னர் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் நவரட்ணவிடம் கருத்து கேட்டபோது, பல்கலைக்கழக  ஆசிரியர்களின் பகிஷ்கரிப்பு அடுத்த சில தினங்களில் முடிவடையும் எனக் கூறினார்.

இவ்விடயம் தொடர்பாக கொள்கை ஆவணமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் உப தலைவரான வண. தம்பர அமில தேரர் ஒப்புக்கொண்டார்.

எனினும்,” இந்த அமைச்சரவை பத்திரத்தின் பிரதியொன்றை நாம் இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை. எம்முடன் இணைந்து தயாரிக்கப்பட்ட ஆவணத்தை அரசாங்கம் அங்கீகரித்ததா என்பது தெரியவில்லை. நாம் அதை பார்வையிட்ட பின்னர் அது குறித்து கருத்து கூற முடியும்” என அவர் தெரிவித்தார்.

Related Posts